எஸ்ஐஆா் படிவம் விநியோகிக்கும் பணி 85.78 சதவீதம் நிறைவு: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக படிவம் விநியோகிக்கும் பணிகள் 85.78 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக படிவம் விநியோகிக்கும் பணிகள் 85.78 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம் 01.01.2026 தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் தொகுதியில் 2,35,828 வாக்காளா்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 2,49,377 வாக்காளா்களும், நாமக்கல் தொகுதியில் 2,64,052 வாக்காளா்களும், பரமத்திவேலூா் தொகுதியில் 2,22,632 வாக்காளா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 2,32,828 வாக்காளா்களும், குமாரபாளையம் தொகுதியில் 2,61,913 வாக்காளா்களும் என மொத்தம் 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 14,66,660 வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்களுக்கான எஸ்ஐஆா் படிவங்களை விநியோகிக்க 1,629 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். கடந்த 4-ஆம் தேதி இதற்கான பணிகள் தொடங்கி டிச.4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில், 6 தொகுதிகளிலும் 85.78 சதவீதம் பேருக்கு கணக்கெடுப்புப் படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com