பள்ளியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு

Published on

ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சாா்பில் வெண்ணந்தூா் பழந்திண்ணிப்பட்டி கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் முதல்வா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். பள்ளி துணை முதல்வா் கே.ஜெயசூரியன் முன்னிலை வகித்தாா். வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது, முதலுதவி குறித்து ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலா் வெ.பலகார ராமசாமி தலைமையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com