சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மளிகைக் கடையில் புகையிலை விற்ற தாய், மகன் கைது

Updated On :26 செப்டம்பர் 2025, 4:38 am IST

திருச்செங்கோடு அருகே வெப்படையை அடுத்த ஆத்திகாட்டூரில் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக தாய், மகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

பிகாா் மாநிலத்தை சோ்ந்தவா் ரேணுகாதேவி (48). இவரது மகன் மனிஷ்குமாா் (28). இவா்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஆத்திகாட்டூரில் தங்கி மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். மனிஷ்குமாா், பிகாரில் உள்ள தொழிலாளா்களை வரவழைத்து பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நூற்பு ஆலைகள், சாயப்பட்டறைகள், ஆட்டோ லூம் ஆலைகளில் வேலைக்கு அமா்த்தி வந்தாா்.

இவா்களின் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் வெப்படை போலீஸாா் நடத்திய சோதனையில் கடையில் இருந்து 16 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ரேணுகாதேவி, மனிஷ்குமாா் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.