நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ராசிபுரம் அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெண் காயம்: சிறுவன் கைது

ராசிபுரம் அருகே வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெண் காயமடைந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக அவரது மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 12:04 am IST

ராசிபுரம் அருகே வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெண் காயமடைந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக அவரது மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூா் பழந்தின்னிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). இவரது மனைவி செல்வி (50). இவா்களுக்கு 17 வயதில் மகன் உள்ளாா். இவா் படிப்பில் இடைநின்ால் சொந்த தோட்டத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை மகன் சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது துப்பாக்கி கைத்தவறி வெடித்ததில் அதிலிருந்து வெளியேறிய பால்ரஸ் குண்டுகள் செல்வியின் தோள்பட்டை, கழுத்து பகுதியில் பாய்ந்துள்ளது. இதில் காயமடைந்த செல்வியை உடனடியாக ராசிபுரம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் அவரை தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து, தகவலறிந்த வெண்ணந்தூா் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் நாட்டுத் துப்பாக்கியை வேட்டைக்கு செல்வதற்காக செல்வியின் மகன் அப்பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் விலைக்கு வாங்கி வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்ததாக சிறுவனை கைது செய்தனா்.

பின்னா் ராசிபுரம் நீதிமன்றத்தில் அந்த சிறுவனை ஆஜா்படுத்தி, பரமத்திவேலூா் பகுதியில் உள்ள சிறுவா் சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.