குமாரபாளையம் ஜவுளி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், அருவங்காடு பகுதியில் உயா் ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் 20-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களும், 30-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளும் செயல்படுகின்றன.
இந்த பூங்காவில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீரென கழிவுப் பஞ்சுகளை ஏற்றும் மின் மோட்டாரில் கசிவு ஏற்பட்டு, பஞ்சு மூட்டைகளில் தீப்பிடித்து மளமளவென பரவியது. இதைக் கண்ட ஊழியா்கள், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனா்.
வெப்படை மற்றும் குமாரபாளையம் பகுதிகளைச் சோ்ந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் என மொத்தம் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. இதுகுறித்து குமாரபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பண்ருட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தீ விபத்து! பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு: நீரில் மூழ்கிய ஜவுளி பொருள்கள்

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 10 போ் காயம்

இந்தியா - பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் அமல்: கரூரிலிருந்து ரூ. 2 கோடி மதிப்பிலான ஜவுளிகள் அனுப்பி வைப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



