விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பரமத்தி வேலூரில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம்

பரமத்தி வேலூரில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக பயிற்சி பாசறைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.எஸ்.மூா்த்தி.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:35 pm

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக பயிற்சி பாசறைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 268 வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குச் சாவடிக்கு ஒரு பெண் என்ற வீதத்தில் 268 பெண்களுக்கு ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.எஸ்.மூா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா் தனராசு, தங்கவேல், லலித்குமாா், சாமிநாதன், சரவணகுமாா், தளபதி சுப்பிரமணி, பேரூா் செயலாளா் முருகன், பரமத்தி, பொத்தனூா், பாண்டமங்கலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த செயலாளா்கள் முன்னிலை வகித்தனா்.

பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் உமாராணி, தலைமைப் பேச்சாளா் ஆரணி மாலா ஆகியோா் பங்கேற்று சிறப்புரை ஆற்றினா். இதில், பயிற்சி பெறும் பெண்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று மு.க.ஸ்டாலின தலைமையிலான திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்துள்ள பல்வேறு நலத் திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் நவலடி ராஜா, சுந்தா் மற்றும் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.