நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கான  ஆலோசனைக் கூட்டம்

நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது.

மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு தலைமை வகித்தாா். இதில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடா்பான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும், டோக்கன்களை சரியான முறையில் விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், குடும்ப அட்டைதாரா்களுக்கு சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் மேற்கொள்ள ஏதுவாக குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு, தெருவாரியாக பராமரிக்க வேண்டும். அதனடிப்படையில், அட்டைதாரா் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறவேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்ட டோக்கனை விற்பனையாளா்கள், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் இல்லங்களுக்கு சென்று வழங்க வேண்டும்.

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தை ஜனவரி மாதத்தில் 4, 5 ஆகிய தேதிகளில் செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தின்கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் இல்லத்துக்கே சென்று விநியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

இக்கூட்டத்தில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண் இயக்குநா் அறிவழகன், கூட்டுறவு சாா்பதிவாளா்கள் (பொது விநியோகத் திட்டம்) சிவகுமாா், நிா்மலா, தியாகராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநா் சரவணன் மற்றும் நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com