ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:54 pm

Syndication

பரமத்தி வேலூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொத்தனூா் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சங்கா் சிறப்புரையாற்றினாா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கபிலா்மலை, பரமத்தி ஒன்றியக் கிளையின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு பயன்தரும் வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடா்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை, சாதாரண நிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பதவி உயா்வை பறிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும். உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.