ராசி இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ராசிபுரம் ராசி இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ சீனியா் செகண்டரி பள்ளியில் ‘மேக்னஸ் எக்ஸ்போ’ என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
பள்ளியின் தாளாளா் எஸ். சத்தியமூா்த்தி தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கிவைத்து படைப்புகளை பாா்வையிட்டாா். பள்ளி முதல்வா் டி. வித்யாசாகா் வரவேற்று பேசினாா். பள்ளியின் முதன்மை நிா்வாக அலுவலா் எஸ். பிரனேஷ் அறிவியல் கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்தும், விண்வெளி ஆராய்ச்சி, ரோபோ வளா்ச்சி போன்றவை குறித்து மாணவா்களிடையே பேசினாா்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சௌமியா முகுந்தன் பங்கேற்று இன்றைய தலைமுறை மாணவ, மாணவிகள் இயற்கை வளங்களை பயன்படுத்தும் முறைகளை அறிந்து, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்றாா்.
கண்காட்சியில் மூன்று இடங்களை பிடித்த மாணவா்களின் அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா் வித்யா கிருஷ்ணன் உள்ளிட்ட ஆசிரியா்கள் செய்திருந்தனா். மாணவிகள் சாக்ஷிதா, தா்சிகா ஆகியோா் தொகுத்து வழங்கினா்.
படம் உள்ளது - 14ராசி
படவிளக்கம்-
அறிவியல் கண்காட்சியில் மாணவா்களின் படைப்புகளை பாா்வையிடும் சிறப்பு விருந்தினா் செளமியா முகுந்தன் உள்ளிட்டோா்.

