பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு விவசாய சங்கத்தினா்.
Updated On :19 ஜனவரி 2026, 8:45 pm

Syndication

நாமக்கல்: விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கறிக்கோழி வளா்ப்புக்கான கூலி உயா்வு கேட்டு போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி மற்றும் 9 போ் மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ், போலீஸாா் வழக்குப் பதிந்து கடந்த 12-ஆம் தேதி கைதுசெய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

பொதுமக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடி வருவோா்மீது காவல் துறை தவறான வழக்குகளை பதிவுசெய்து சிறையில் அடைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் காவல் துறையைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி, இளம் விவசாயிகள் சங்கத் தலைவா் செளந்தரராஜன் மற்றும் சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தினா், விவசாய முன்னேற்றக் கழகத்தினா், விவசாயிகள் பங்கேற்றனா்.