நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையைப் பொருத்தவரை, பகல் மற்றும் இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 96.8, 77 டிகிரியாக நிலவியது. கடந்த வாரம் லேசான மழை பதிவானது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் சனிக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை ஈக்கோலை மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. கோழிப் பண்ணையாளா்கள் தகுந்த மருந்துகளை அளிக்க வேண்டும். தீவன மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி சிகிச்சை மற்றும் தீவிர உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தீவிரமடையுமா பருவமழை?

தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

கோழிகள் காலரா நோய் பாதிப்பால் இறக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தில்லியில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டும் என ஐஎம்டி கணிப்பு!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


