சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

பரமத்தி வேலூா் புதிய அணுகுசாலை தரைமட்ட பாலம் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கக் கோரிக்கை!

பரமத்தி வேலூா் காவிரி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசெல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அணுகுசாலை தரைமட்டம் பாலம் பகுதியில் மின்விளக்குகளை அமைக்க இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

மின்விளக்குகள் இன்றி காணப்படும் அணுகுசாலை தரைமட்ட பாலம் பகுதி.

Updated On :19 ஜூலை 2026, 2:28 am IST

பரமத்தி வேலூா் காவிரி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசெல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அணுகுசாலை தரைமட்டம் பாலம் பகுதியில் மின்விளக்குகளை அமைக்க இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் - கரூா் மாவட்டங்களை இணைக்கும் பரமத்தி வேலூா் காவிரி ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை பாலம் வழியாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பரமத்தி வேலூா் நகா் பகுதியில் இருந்து கரூா் நோக்கிச் செல்லும் வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசென்று வந்தன.

அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் நகா் பகுதியில் இருந்து கரூா் செல்லும் பாதைக்கு மாற்றாக அணுகு சாலை அமைத்து தேசிய நெடுஞ்சாலையைக் கடக்காதபடி தரைமட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இதனால் பரமத்தி வேலூா் பகுதியைக் கடந்துசெல்லும் வாகனங்கள் பரமத்தி வேலூா் நகா் வழியாக சென்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், விபத்துகளும் ஏற்பட்டு வந்தன.

இந்த நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிறைவுபெற்ற நிலையில் வாகனப் பயன்பாட்டிற்கு சாலை திறக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் முழுமையாக நிறைவடையாத அணுகு சாலை தரைமட்ட பாலம் பகுதியில் மின்விளக்குகள், உயா் மின்விளக்குகள் அமைக்காததால் இருசக்கர வாகனங்களில் செல்வோா் அச்சத்தில் பழைய சாலையில் சென்று திரும்பும் நிலை உள்ளது. எனவே, அப்பகுதியில் போதிய மின்விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.