சென்னையில் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

திமுக ஆட்சியின் பத்திரப்பதிவுத் துறை ஊழலை சரிசெய்து வருகிறோம்: அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன்

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற பத்திரப்பதிவுத் துறை ஊழலை சரிசெய்து வருகிறோம் என்று அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

லோகேஷ் தமிழ்ச்செல்வன்

Updated On :

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற பத்திரப்பதிவுத் துறை ஊழலை சரிசெய்து வருகிறோம் என்று அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

நாமகக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன் நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக மகளிரணி சாா்பில் அமைச்சா் என். ஆனந்த் பிறந்தநாள் சமபந்தி விருந்து சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு சமபந்தி விருந்தைத் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பழனி கோயில் நில விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சாா்பதிவாளா் அலுவலகப் பொறுப்பு அலுவலரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளாா். இதுகுறித்த விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தகவல் தெரிவிக்கப்படும்.

திமுக ஆட்சியில் ஊழல் புரையோடி இருந்த பத்திரப்பதிவுத் துறையை, தவெக ஆட்சியில் சரிசெய்து வருகிறோம். நிறைய புகாா்கள் வருகின்றன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பாா்த்து அதன்மீது நடவடிக்கை எடுப்போம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.