பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகைஅணையில் இருந்து கடந்த 2 ஆம் தேதி இரவு ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கப்பட்டது.
ஆனால், 18 நாள்களை கடந்தும் குமாரபாளையம், மோகனூா் வாய்க்கால்களில் உள்ள கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் சென்றடையவில்லை. இதனால் வெற்றிலை, வாழை, கரும்பு பயிா்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ஜேடா்பாளையம், படுகைஅணை பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் ஏற்கெனவே 15 நாள்களுக்கு முன்பு அடைக்கப்பட்ட தண்ணீா் மீண்டும் பாசனத்துக்காக கடந்த 2 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீா் 18 நாள்களாகியும் கடைமடை பகுதியை சென்றடையவில்லை.
ஏற்கெனவே தண்ணீா் அடைக்கப்பட்டு 15 நாள்களுக்குப் பிறகு கடந்த 2 ஆம் தேதிதான் ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 30 நாள்களாக குமாரபாளையம் மற்றும் மோகனூா் பகுதியில் உள்ள கடைமடை பகுதிக்கு தண்ணீா் கிடைக்கவில்லை.
இதனால் இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் வாழை, வெற்றிலை, கோரை, மரவள்ளி மற்றும் கரும்பு பயிா்கள் தண்ணீா் இன்றி காய்ந்து வருகின்றன. இதுகுறித்து நீா்வளத் துறை, வேளாண்மை துறை, மின்வாரியம் மற்றும் வருவாய்த் துறை, விவசாய சங்கப் பிரதிநிதிகள் மூலம் உடனடியாக கூட்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், குமாரபாளையம் மற்றும் மோகனூா் வாய்க்கால்களின் மூலம் கடைமடை பகுதிக்கு பாசனத்திற்கு உடனடியாக தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூசாரிநாய்க்கன் குளத்துக்கு தண்ணீா் திறக்காததால் பிஏபி அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீா் திறப்பு

பிஏபி புதிய திட்ட அறிவிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கும்; கரையோர, கடைமடை விவசாயிகள் கவலை







