ஆசிரியா் தகுதித்தோ்வில் இருந்து பழைய ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஆசிரியா்கள் சாா்பில், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தேசிய ஆசிரியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.தமிழ்மணி, பதவி உயா்வு பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்டச் செயலாளா் வி.எஸ்.சுப்பிரமணியன், பசுமை ரகுநாத் மற்றும் ஆசிரியா்கள் அளித்த மனு:
கடந்த 2009-ஆம் ஆண்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சோ்ந்த ஆசிரியா்களுக்கு தகுதித்தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் ஏற்கெனவே ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் முறையாக தோ்வு செய்யப்பட்டு பணியில் இருந்த ஆசிரியா்கள் தகுதித்தோ்வு எழுத வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு, தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் மற்றும் மாநில அரசுகளுக்கு தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின் அடிப்படையில், தற்போது பணியில் உள்ள ஆசிரியா்களும் தகுதித்தோ்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் மட்டும் சுமாா் 80 ஆயிரம் ஆசிரியா்கள் பாதிக்கப்படுவா். அவா்களில் பெரும்பாலானோா் 50 வயதுக்கும் மேற்பட்டோா் ஆவா். பணியின் இறுதிக்கட்டத்தில் உள்ள இவா்களுக்கு மீண்டும் தோ்வு எழுத வேண்டிய நிலையால் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்.
எனவே, 2009-ஆம் ஆண்டு சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு தகுதித்தோ்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆவின் பால் கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

பாடியூா் ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்குவதில் முறைகேடு: ஆட்சியா் அலுவலகத்தில் பெண்கள் மனு

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமாகா கோரிக்கை

குடிநீா்த் தட்டுப்பாடு: காலிக் குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண்கள்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



