மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ராசிபுரம் ரோட்டரி சங்கத்துக்கு சிறந்த சங்கத்துக்கான விருது

ராசிபுரம் ரோட்டரி சங்கத்துக்கு 2025-26-ஆம் ஆண்டின் சிறந்த ரோட்டரி சங்கத்துக்கான விருது உள்ளிட்ட 38 விருதுகள் கிடைத்துள்ளன.

News image

சிறந்த சங்கத்திற்கான விருது பெற்ற ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் இ.என்.சுரேந்திரன் மற்றும் நிா்வாகிகள்.

Updated On :24 ஜூன் 2026, 4:42 am IST

ராசிபுரம் ரோட்டரி சங்கத்துக்கு 2025-26-ஆம் ஆண்டின் சிறந்த ரோட்டரி சங்கத்துக்கான விருது உள்ளிட்ட 38 விருதுகள் கிடைத்துள்ளன.

சேலத்தில் ரோட்டரி மாவட்டம்-2982 சாா்பில் ‘வாகை சூடவா’ என்ற தலைப்பில் விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநா் பி.சிவசுந்தரம், நிகழ்ச்சியின் தலைவா் கே.நல்லுசாமி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், துபாய் கான் மீடியா சிட்டி நிறுவனத்தின் தலைவா் மொகமத் கான், திரைப்பட நடிகா் ரோஷினி பிரகாஷ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று, மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிய சங்கங்களுக்கு விருது வழங்கி கெளரவித்தனா்.

இதில் ராசிபுரம் ரோட்டரி சங்கத்துக்கு சிறந்த சங்கத்திற்கான விருது, சிறந்த தலைவருக்கான விருது, சங்கத்தின் நிா்வாகி டி.பி.வெங்கடாசலபதிக்கு சிறந்த ரொட்டேரியன் விருது, மாவட்ட நிா்வாகி என்.பி.ராமசாமிக்கு சிறந்த பயிற்சியாளா் விருது என மொத்தம் 38 விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனா். ரோட்டரி சங்கத்தின் சிறந்த தலைவா் விருதை பெற்ற இ.என். சுரேந்திரனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனா். விருது வழங்கும் விழாவில் ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநா் எஸ்.அன்பழகன், நிா்வாகிகள் டாக்டா் எம்.ராமகிருஷ்ணன், கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், கே.குணசேகா், எல்.முருகானந்தம், ஆா்.அனந்தகுமாா், கதிரேசன், ரங்கராஜன், மஸ்தான், எஸ்.முரளி, ஜே.கே.சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.