ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கால்நடை விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

News image

கால்நடைகள்... - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:02 am IST

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகள் குறித்த விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு 12 இலக்க காது குறி எண் பதிவுசெய்து, அதன் முழு விவரத்தையும் மின்னணு தகவல் மூலம் பதிவேற்றம் செய்ய தேசிய எண்ம கால்நடை திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் செயற்கைமுறை கருவூட்டல், காப்பீட்டு விவரம், சினையுறு சதவீதம், கன்று ஈன்ற விவரம், கன்று பிறப்பு விகிதம், உரிமையாளா் பதிவு மற்றும் பெயா் மாற்றம், பருவத்துக்கேற்ப மேற்கொள்ளப்படும் கோமாரி நோய், தோல்கழலை நோய், அடைப்பான் நோய் ஆகியவற்றுக்கான தடுப்பூசி பதிவுகள், நோய் கிளா்ச்சி அறிக்கை, பால் உற்பத்தி பதிவு விவரங்கள் ஆகிய தரவுகள் சேகரிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

தரவுகளை பதிவேற்றம் செய்யும்போது, உரிமையாளரின் கைப்பேசி எண் மற்றும் ஆதாா் எண் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விவசாயிகளின் கைப்பேசிக்கு வரும் கடவுச்சொல் மூலம் கால்நடைகளின் முழு விவரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதன்மூலம் கால்நடைகள் கொள்முதல், விற்பனை ஆகியவை மேற்கொள்ளப்படும்போது கால்நடைகள் பற்றிய முழு விவரத்தையும் கால்நடை வளா்ப்போா் தெரிந்து கொள்ளலாம். இந்த பணி தொடா்பாக கிராமங்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினா் வரும்போது கால்நடை வளா்ப்போா், உரிமையாளா்கள் தங்களுக்கு வரும் கடவுச்சொல்லை பகிர வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களுக்கு தெளிவாக பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.