நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 9.30 கோடியில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
சேந்தமங்கலத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் ரூ. 3 கோடியில் முதல்வா் சிறு விளையாட்டரங்கம், நாமக்கல் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ. 40 லட்சத்தில் புதிய கபடி ஆடுகளம் மற்றும் ரூ. 50 லட்சத்தில் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம் ஆகியவை திறக்கப்பட்டன.
மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மோகனூா், எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலா ரூ. 60 லட்சத்தில் கூடுதல் கட்டடம், மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 75 லட்சத்தில் கூடுதல் கட்டடம், கொல்லிமலை வட்டம் சோளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சத்தில் பொது சுகாதார அலகு, நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 65 லட்சத்தில் பொது சுகாதாரஅலகு, பள்ளிபாளையத்தில் ரூ. 1.20 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், எருமப்பட்டி வரகூரில் ரூ. 45 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், மோகனூா் வட்டம் பாலப்பட்டியில் ரூ. 65 லட்சத்தில் பொது சுகாதார அலகு ஆகியவற்றை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய கபடி ஆடுகளம் மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தாா். பின்னா், சிறுசேமிப்புத் துறை சாா்பில் அதிக வசூல் செய்த 21 பேரை பாராட்டி ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், ஈரோடு மண்டல விளையாட்டு அலுவலா் அருண், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மலேரியா சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

பருவகால நோய்களுக்கான மருந்துகள்: ஆண்டு முழுவதும் இருப்பு வைக்க நடவடிக்கை!

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்

எலவந்தி வடுகபாளையத்தில் தீ தொண்டு நாள் வார விழா
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

