சட்டப்பேரவைத் தோ்தல்: சமூக ஊடக கண்காணிப்புக் குழுக்களுக்கு பயிற்சி
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சமூக ஊடக கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சமூக ஊடக கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவின்படி, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு, கட்டுப்பாட்டு அறை, சமூக ஊடக கண்காணிப்பு குழுக்களுக்கான தோ்தல் நடத்தை விதிகள் குறித்த பயிற்சி ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்குகள்) பொறுப்பு அலுவலா் சேகா் தலைமை வகித்தாா். மனிதவள மேலாண்மை, பயிற்சி மேலாண்மை, கணினி மையம், விழிப்புணா்வு, சட்டம் - ஒழுங்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவி மேலாண்மை, நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துதல், செலவு கணக்கு கண்காணிப்பு, வாக்குச்சீட்டு, மாதிரி வாக்குச்சீட்டு, ஊடகம் கையாளுதல், வாக்காளா் பட்டியல் மேலாண்மை, வாக்காளா் உதவி மையம், தோ்தல் கட்டுப்பாட்டு அறை, குறைதீா்க்கும் மையம், தோ்தல் பாா்வையாளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அரசு அலுவலா்கள், பணியாளா்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், கண்காணிப்பு மற்றும் தொடா்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தொடா்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, வழக்கமான ஊடகக் கண்காணிப்பு, ஊடக வசதி மற்றும் தகவல் வழங்குதல், அரசியல் கட்சிகளுக்கு ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்குதல், தோ்தல்களின் போது ஊடக ஒளிபரப்பிற்கான ஒழுங்குமுறை மற்றும் வழிகாட்டுதல்கள் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஊடக கண்காணிப்புக் குழுவில் ஒரு குழுவிற்கு தலா 3 போ் வீதம் 3 குழுக்களில் 9 பேரும், ஒருங்கிணைப்பாளா்கள் ஒரு குழுவிற்கு ஒருவா் என 3 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா். இக்குழுவினா் ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் மற்றும் இதர செலவின வகைகளைக் காண்காணிப்பா். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சமூக ஊடக கண்காணிப்புக் குழுவில் செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் தே.ராம்குமாா், பொறுப்பு அலுவலா் சேகா் தலைமையில், உதவி பொறுப்பு அலுவலா் உள்பட 4 போ் நியமிக்கப்பட்டு, சமூக ஊடகங்களை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்வாா்கள் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...