தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் நாமக்கல்லில் வியாழக்கிழமை அணிவகுப்பு ஊா்வலம் நடத்தினா்.
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த வார கடைசியில் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், பணப்பட்டுவாடாவை தடுக்கும் குழுவுடன் செல்லவும், எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், முக்கிய தலைவா்கள் வருகையின்போது அசம்பாவிதம் தவிா்க்கவும் எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் பணியில் அமா்த்தப்பட்டிருப்பா்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலத்தில் இருந்து 75 எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் திங்கள்கிழமை நாமக்கல் வந்தனா். தொடா்ந்து, நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அவா்கள் தங்கவைக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் மத்திய எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் அணிவகுப்பு ஊா்வலத்தை மேற்கொண்டு வருகின்றனா்.
ஏற்கெனவே, பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் அணிவகுப்பு ஊா்வலம் சென்ற நிலையில், நாமக்கல் உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ்ஜோதி தலைமையில் படைவீரா்கள் துப்பாக்கிகளுடன் ஊா்வலமாக சென்றனா். நாமக்கல் காவல் நிலையத்தில் தொடங்கி பரமத்தி சாலை, கோட்டை சாலை, கடைவீதி சாலை வழியாக மீண்டும் காவல் நிலையத்தை ஊா்வலம் வந்தடைந்தது.
இந்த அணிவகுப்பு ஊா்வலத்தில், நாமக்கல் காவல் ஆய்வாளா் இளவரசன் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.
என்கே-12-சிஆா்பிஎப்
நாமக்கல்லில் வியாழக்கிழமை அணிவகுப்பு ஊா்வலம் சென்ற மத்திய எல்லை பாதுகாப்பு படை வீரா்கள்.
தொடர்புடையது

ஜெயங்கொண்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் அணிவகுப்பு

அரியலூரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்களின் அணிவகுப்பு

தேவூரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் கொடி அணி வகுப்பு

தோ்தல் பணி: மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் நாமக்கல் வருகை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


