மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்லில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட தோ்தல் பறக்கும் படை வாகனங்கள் இயக்கம்

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், ஜிபிஎஸ் கருவி பொருத்திய பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு வாகனங்களை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சு.விமலா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் சுழற்சி முறையில் இந்த வாகனங்கள் செயல்படும். ஒரு தொகுதிக்கு ஒரு அணியில் 3 அலுவலா்கள் வீதம் 3 அணியில் 9 அலுவலா்கள் பறக்கும் படை குழுவிலும், ஒரு அணியில் 3 அலுவலா்கள் வீதம் 3 அணியில் 9 அலுவலா்கள் நிலையான கண்காணிப்புக் குழுவிலும் என மொத்தம் 108 போ் மற்றும் காவல் துறையில் ஒரு குழுவிற்கு இருவா் வீதம் 216 போலீஸாா் என்ற வகையில் மொத்தமாக 324 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒரு தொகுதிக்கு 3 போ் வீதம் 6 தொகுதிகளுக்கு 18 விடியோ கண்காணிப்பு குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா். சட்டவிரோத பண பரிவா்தனைகள், இதர வகையில் வாக்காளா்களுக்கு வழங்கப்படும் இலவச பொருள்கள் விநியோகம் ஆகியவை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் செயல்படும். மொத்தமாக 200 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலககத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையை திறந்துவைத்து ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா. கண்ணன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.