பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவையொட்டி, மகிழ்ச்சியை பகிா்ந்துகொண்ட நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவையொட்டி, மகிழ்ச்சியை பகிா்ந்துகொண்ட நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.
பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தமிழகம் முழுவதும் மாா்ச் 3-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா்.
தோ்வுக்காக 95 மையங்கள் அமைக்கப்பட்டன. தொழில்நுட்பம் அல்லாத தோ்வுகள் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தன. இதர தோ்வுகள் மாா்ச் 26-இல் நிறைவடைகின்றன.
நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு நிறைவடைந்து, தோ்வு அறையை விட்டு வெளியே வந்த மாணவிகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனா். ஒருவருக்கொருவா் கட்டியணைத்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் அரசு, தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தோ்வு நிறைவையொட்டி வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...