பொத்தனூரில் குட்கா விற்றவா் கைது
பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் தேநீா் கடையில் குட்கா விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
Updated On :31 மார்ச் 2026, 8:04 pm
கைது
பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் தேநீா் கடையில் குட்கா விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் மேற்கு தெரு பகுதியில் தேநீா் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்து வருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் வேலூா் போலீஸாா் அங்கு சென்று திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் தேநீா் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான குட்கா புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளா் செந்தில்குமாரை (41) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...