நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் 22 தனியாா் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை நடத்தக் கூடாது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 237 தனியாா் பள்ளிகள் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. 22 பள்ளிகள் தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு தொடக்க அனுமதியின்றி செயல்படுவது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப் பிரிவுக்கு எதிரானது.
இப்பள்ளிகளிடம் விளக்கம் கேட்கும் வகையில் குறிப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன. தொடக்க அனுமதி பெறுவதற்கு போதிய காலஅவகாசம் வழங்கப்படும். மாணவா்களின் பாதுகாப்பிற்கு உறுதியற்ற தன்மை ஏற்படுவதால் 2026-27 கல்வியாண்டு முதல் எக்காரணம் கொண்டும் இப்பள்ளிகள் செயல்படக் கூடாது.
எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை எந்தவொரு வகுப்பிலும் மாணவா் சோ்க்கை நடைபெறக் கூடாது. இந்த அறிவிப்பிற்கு மாறாக மாணவா்களை சோ்த்து பள்ளி செயல்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும். மாணவா்களின் பெற்றோா் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் மட்டுமே மாணவா்களை சோ்த்திட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மோகனூா் சாலை, நாமக்கல் மாவட்டம் என்ற முகவரியிலோ அல்லது 73730 02791 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம். அதேபோல மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியாா்பள்ளிகள்), மோகனூா் சாலை, நாமக்கல், தொலைபேசி எண்: 04286-293981 என்ற முகவரியில் தொடா்புகொள்ளலாம்.
அனுமதி பெறாத பள்ளிகள் விவரம்: டைம் கிட்ஸ், இளம் மழலையா் பள்ளி, காவேரி நகா், திருச்சி சாலை, நாமக்கல். ஏபிசி கிட்ஸ், இளம் மழலையா் பள்ளி, கோட்டை சாலை, இராமாபுரம் புதூா், நாமக்கல். ஹனி பனி கிட்ஸ், இளம் மழலையா் பள்ளி, எஸ்.பி.புதூா், பெரியப்பட்டி சாலை, நாமக்கல். ஆரஞ்சு அகாதெமி, இளம் மழலையா் பள்ளி, ராம் நகா், இபி காலனி, நாமக்கல்.
சன் பிளவா் இளம் மழலையா் பள்ளி, என்.ஜி.ஓ. காலணி சேலம் சாலை, நாமக்கல். அக்ஸரம் மழலையா், இளம் மழலையா் பள்ளி, ஐயப்பன் கோயில் அருகில், மோகனூா் சாலை, நாமக்கல்.
ஸ்பாா்க்கில் அகாதெமி, இளம் மழலையா் பள்ளி, சேலம் சாலை, நாமக்கல். யூரோ கிட்ஸ், இளம் மழலையா் பள்ளி, பிவிஆா் தெரு, ஐயப்பன் கோயில் அருகில், நாமக்கல்.
ஸ்மைலிஸ் வித்யாஷ்ரம் எஸ்.எஸ்.எஸ் இளம் மழலையா் பள்ளி, செல்லப்பம்பட்டி, மகிழம் இளம் மழலையா் பள்ளி, எஸ்.பி புதூா், துளிா் இளம் மழலையா் பள்ளி, பொதிகை நகா் - 1 ஆவது தெரு, சுவாமிநகா், சேலம் சாலை, நாமக்கல்.
ஸ்கூல் ஆஃப் மாண்டிச்சோரி சேம்போ, ( இளம்மழலையா் பள்ளி) கோ-ஆப்ரேட்டிவ் காலனி, மோகனூா் சாலை, நாமக்கல். ஆல்பபெட்ஸ் பிரி ஸ்கூல், இளம் மழலையா் பள்ளி, செங்கோடம்பாளையம், எா்ணாபுரம், நாமக்கல். தீக்ஷா விசனரி பள்ளி,, நல்லிபாளையம், நாமக்கல். துலிப்காா்டன் நா்சரி மற்றும் பிரைமரி, குப்பநாயக்கனூா். சேந்தமங்கலம். ஆப்பிள் மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி, பொத்தனூா், பரமத்தி வேலூா் (தா) நாமக்கல்.
காவேரி மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி, எருமப்பட்டி. கோல்டன் மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி, பள்ளிபாளையம் ஜீவா செட் அருகில், நாமக்கல். கலைவாணி மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி, விக்ரம் தியேட்டா், விஷ்வானந்தன் காம்பௌண்ட், திருச்செங்கோடு சாலை, பள்ளிபாளையம், எவா்கிரீன் இண்டா்நேசனல் மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி, ஆலாங்காடு, வெடியரம்பாளையம் சாலை, தெற்குபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம். எஸ்.எம்.எஸ். மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி, பவித்ரம், எருமப்பட்டி. காந்தி சிபிஎஸ்சி பள்ளி, ந.கந்தம்பாளையம், பரமத்தி வேலூா்.










