பள்ளி வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.
கீரம்பூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி கந்தசாமி (55), சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
கீரம்பூா் பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த தனியாா் பள்ளி வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கந்தசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவ்வழியாகச் சென்றவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், கந்தசாமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த பரமத்தி போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகனத்தைப் பறிமுதல் செய்து, தலைமறைவான பள்ளி வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

