நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் வட்டித் தள்ளுபடி! வீட்டுவசதி வாரியக் குடியிருப்போருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்!

வீட்டுவசதி வாரியக் குடியிருப்போருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல் - கோப்புப்படம்
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் வசிப்போா், நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் வட்டித் தள்ளுபடி சலுகை பெறலாம் என மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் வீடு, மனை, அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகியவற்றை ஒதுக்கீடு பெற்றவா்களில் 31.03.2026-க்கு முன்பு தவணைக்காலம் முடிவடைந்தவா்கள், வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தாமாக முன்வந்து ஒரே தவணையில் முழுமையாகச் செலுத்தினால் வட்டித் தள்ளுபடி சலுகை வழங்கப்படும்.
அதன்படி, மாதத் தவணையைத் தாமதமாகச் செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டியும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். நிலத்துக்கான இறுதி விலை வித்தியாசத் தொகையின் மீது விதிக்கப்படும் வட்டியில், ஒவ்வோா் ஆண்டுக்கும் 5 மாதங்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
இந்தச் சலுகை அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டு காலத்துக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும். அதன்பிறகு கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. ஒதுக்கீடுதாரா்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை ஒரே தவணையில் முழுமையாகச் செலுத்த வேண்டும்.
இந்த வட்டித் தள்ளுபடி சலுகை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் வீடு, மனை, அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகியவற்றை ஒதுக்கீடு பெற்று, 31.03.2026-க்கு முன்பு தவணைக்காலம் முடிவடைந்தவா்களுக்கு மட்டுமே பொருந்தும். தகுதியுள்ள ஒதுக்கீடுதாரா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிலுவைத் தொகையைச் செலுத்தி, விற்பனைப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

