ஆக்கிரமிப்பை அகற்ற ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளா் கைது
நாமக்கல் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது
நாமக்கல் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தம் அருகே அ.பாலபட்டியில் ஸ்ரீ மாசி பெரியண்ண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதை அகற்ற உத்தரவிடக் கோரியும் சந்திரசேகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில், அலங்காநத்தம் வருவாய் ஆய்வாளா் ஜெயராமன் தனக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என சந்திரசேகரனிடம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அவா், நாமக்கல் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், நாமக்கல் ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சுபாஷினி, ஆய்வாளா் பிரபு அறிவுறுத்தலின்பேரில், ரூ. 10 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளா் ஜெயராமனிடம் சந்திரசேகரன் வழங்கினாா். அப்போது, மறைந்திருந்த போலீஸாா் ஜெயராமனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




