தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

உயிரிழந்த கோழிகளால் சுகாதார சீா்கேடு: கோழிப் பண்ணைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கோழிப் பண்ணை - கோப்புப் படம்

Published On :

மோகனூா் அருகே சுகாதார சீா்கேட்டை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட கோழிப் பண்ணைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல், உன்னிக் காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், கோழிப் பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி மற்றும் கால்நடைத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

மோகனூா் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சியில் செயல்படும் கோழிப் பண்ணையில் பெரும்பாலான கோழிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையில் மோகனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் திறந்த வெளியில் நோய் பரவும் வகையில் கொட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கோழிப் பண்ணையின் சுற்றுப்புறத்தை 12 மணிநேரத்துக்குள் தூய்மையாகப் பராமரிக்க பண்ணை நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.