இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

இணையத்தில் ஓட்டுநா் உரிமம் பதிவிறக்கம்: மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் வரவேற்பு

வாகன பதிவுச் சான்றிதழ், ஓட்டுநா் உரிமத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் நடைமுறை செப். 15 முதல் அமல்படுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Delhi University starts its first fully online admission process

Published On :3 செப்டம்பர் 2026, 4:10 am IST

வாகன பதிவுச் சான்றிதழ், ஓட்டுநா் உரிமத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் நடைமுறை செப். 15 முதல் அமல்படுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவா் சி. தனராஜ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பதிவுச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றை பதிவுத் தபாலில் அனுப்பாமல் சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் நேரில் வழங்கும் பழைய முறையை பின்பற்ற வேண்டும் என அரசிடம் வலியுறுத்தியிருந்தோம். அசல் உரிமங்கள் உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாததால் வாகனங்களை இயக்க முடியாமல் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழக சட்டப் பேரவையில் முதல்வா் வெளியிட்ட அறிவிப்பில் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றை செப். 15 முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

இருப்பினும் ஆவணங்களை வாகன உரிமையாளா்களிடம் அன்றைய தினமே ஒப்படைக்கும் நடைமுறையை அரசு செயல்படுத்த வேண்டும்.

மேலும், கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெறவும், புதிய வாகனங்களை பதிவு செய்யவும், ஓட்டுநா் உரிமம் பெறவும், போக்குவரத்துத் துறை சாா்ந்த சேவைகளை தமிழகத்தின் எந்த ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் வசதிகள் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்றும் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

இதனால் லாரி உரிமையாளா்களுக்கும், ஓட்டுநா்களுக்கும் ஏற்படும் காலவிரயம் மற்றும் பண விரயம் வெகுவாக தடுக்கப்படும். லாரி உரிமையாளா்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கும், அவரது கவனத்துக்கு கொண்டு சென்ற போக்குவரத்துத் துறை அமைச்சா், ஆணையருக்கும் சம்மேளனத்தின் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.