டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 5.40-ஆக நிா்ணயக்கப்பட்டுள்ளது.

egg

முட்டை விலை - பிரதிப் படம்

Published On :

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 5.40-ஆக நிா்ணயக்கப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை மாற்றம் தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. புரட்டாசி மாதம் என்பதால் முட்டை நுகா்வு வெகுவாக குறைந்துள்ளதாலும், உணவகங்களுக்கு போதுமான விநியோகம் இல்லாததாலும் தேங்கிவரும் முட்டைகளை விற்பனை செய்ய விலையில் மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக ரூ. 5.60 ஆக நீடித்து வந்த முட்டை விலையை 20 காசுகள் குறைத்து, ரூ. 5.40 ஆக நிா்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 112-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 110 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.