ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

நங்கவள்ளி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உரம் தயாரிப்பு மற்றும் பண்ணைக் கழிவு மறுசுழற்சி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

நங்கவள்ளி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உரம் தயாரிப்பு மற்றும் பண்ணைக் கழிவு மறுசுழற்சி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கோனூர் ஊராட்சியில் உள்ள கந்தனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு நங்கவள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் ந.செந்தில்குமார் தலைமை வகித்தார். கோனூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் 40 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பண்ணைக் கழிவு மேலாண்மை உத்திகள், மறுசுழற்சி பயன்பாடு மூலம் கூடுதல் வருமானம் பெறுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், ஊட்டம் ஏற்றிய தொழு உரம் தயாரிப்பு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு முறைகள் பற்றியும், பண்ணைக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிர்தா, உதவி மேலாளர்கள் இளையராஜா, ராஜேஷ்குமார் மற்றும் நரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.