கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது
சேலத்தில் கட்டடத் தொழிலாளியை குத்திக் கொலை செய்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.


சேலத்தில் கட்டடத் தொழிலாளியை குத்திக் கொலை செய்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (35). கட்டடத் தொழிலாளியான இவர், அம்மாப்பேட்டை ஆதிசெல்வன் தெருவில் உள்ள அரசு துவக்கப் பள்ளி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுதொடர்பாக அம்மாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் கட்டடத் தொழிலாளி செல்வத்தை வேலைக்கு அழைத்துச் செல்லும் சக தொழிலாளர்கள் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோரை அழைத்து விசாரித்தனர்.
இதில் அம்மாப்பேட்டை பெரியகிணறு தெருவைச் சேர்ந்த மோகனுக்கு (44) இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், கட்டட வேலைக்குச் செல்வத்துடன் சென்றதும், வேலை முடிந்து மோகனுக்கு முழுக் கூலித் தொகையைத் தராமல் பாதித் தொகையை மட்டும் தந்துள்ளது தெரியவந்தது. இதனால் செல்வத்துக்கும், மோகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மோகனை, செல்வம் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மோகன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனிடையே திங்கள்கிழமையும் மோகனை, செல்வம் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன், துவக்கப்பள்ளி அருகே மது அருந்திக் கொண்டிருந்த செல்வத்தை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...