/

பட்டு வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டம்

அரசாணையின்படி வழங்கவேண்டிய நிலுவை சம்பளம் மற்றும் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கக் கோரி சேலத்தில் பட்டுவளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகம் முன் ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 5:03 am

தினமணி

அரசாணையின்படி வழங்கவேண்டிய நிலுவை சம்பளம் மற்றும் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கக் கோரி சேலத்தில் பட்டுவளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகம் முன் ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தமிழ்நாடு அரசு பட்டுவளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பட்டுவளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
 1.1.2006 முதல் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கக் கோரியும், 1.4.2013 முதல் அரசாணையின்படி வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 பட்டு வளர்ச்சித் துறையில் ஆய்வாளர் மற்றும் இளநிலை ஆய்வாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய முறையான சம்பளம் நிர்வாகத்தின் சீர்கேட்டால் தங்களுக்கு முறைப்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.
 மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாமல் உள்ள அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.