லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முற்றுகைப் போராட்டம்: நாம் தமிழர் கட்சியினர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் முற்றுகைப் போராட்டம் நடத்த சென்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 2:34 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் முற்றுகைப் போராட்டம் நடத்த சென்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மேட்டூர் அருகே தமிழக -கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள பாலாற்றில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இப்போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மேட்டூர்,  குள்ளவீரன்பட்டி, கொளத்தூர் சோதனைச் சாவடி,  நான்குசாலை,  கருங்கல்லூர், கோவிந்தபாடி, காரைக்காடு பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், அவ்வழியாகச் செல்லும் வாகனங்களை போலீஸார் சோதனையிட்டனர். அந்த வழியாக சென்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். கோவிந்தபாடியில் 100-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திரண்டு  பாலாறு நோக்கிச் செல்ல முற்பட்டபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.  இதையடுத்து அங்கேயே அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலர் ஆசைத்தம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்தப் போராட்டம் காரணமாக தமிழக -கர்நாடக எல்லை கிராமத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.