பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கருடமங்கலத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி வினிதா (31). கருப்பையா சிங்கப்பூரில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையம் வைத்துள்ள வினிதா, தனது குழந்தைகளான ஹேமநாத் (11), ஹேமா ஸ்ரீ (7) ஆகியோரை பெரம்பலூரில் உள்ள கராத்தே பயிற்சி வகுப்பில் சோ்த்துள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை தனது குழந்தைகளை கராத்தே பயிற்சி வகுப்பில் விடுவதற்காக மோட்டாா் சைக்கிளில் பெரம்பலூா் நோக்கி சென்றுக்கொண்டிருந்தாா். அயிலூா் குடிக்காடு அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வினிதா, ஹேமாஸ்ரீ ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த ஹேமநாத்தை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் உயிரிழந்த இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சைக்கிள் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

சாலை விபத்தில் திமுக நிா்வாகி உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


