காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பூலாம்பட்டி கதவணையில் பழுதடைந்த ஷட்டர்களை விரைவாக சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பழுதான ஷட்டர்களை விரைவாக

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:34 am IST

பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பழுதான ஷட்டர்களை விரைவாக சீரமைத்திட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை தேக்கும் வகையில்,  செக்கானூர்,  பூலாம்பட்டி அருகில் உள்ள நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி , ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கதவணைகள் 
அமைக்கப்பட்டு  நீரினை தேக்கி மின்உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மின் உற்பத்திக்காக இக்கதவணைகளில் தேக்கப்படும் நீரினால்  அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
 இந்த நிலையில் பூலாம்பட்டி - நெரிஞ்சிப்பேட்டை பகுதிகளை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையின் ஷட்டர்களில் (மதகுகளில்), கடந்த டிசம்பர் மாதம் திடீர் என நீர்க் கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து நீர்க் கசிவு அதிகரித்து வந்த நிலையில்,  ஷட்டர் எண் 13 மற்றும் 7  பராமரிப்புப் பணிக்காக 
திறக்கப்பட்டது. இதனால் கதவணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறியதால், அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் உள்வாங்கியது. 
இதனையடுத்து பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், மேலப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து போனது.  இப்பகுதியில் வழக்கமாக நடைபெற்று வந்த விவசாயப் பணிகள் பாதிப்படைந்ததாக  அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.  மேலும் 
தற்போது காவிரியில் கூடுதலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,  கதவணையின் அனைத்து ஷட்டர்களும் திறக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பழுதான ஷட்டர்களை ஆய்வு செய்து  சீரமைத்திட வேண்டும் எனவும்,  தற்போது காவிரியில் திறக்கப்பட்டுள்ள உபரி நீரினை தேக்கிட இது ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.