எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

உண்ணாவிரதமிருந்த 5 விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதி

வாழப்பாடியில் விவசாய நிலங்களுக்கு மேல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து

Updated On :25 டிசம்பர் 2018, 8:28 am IST

வாழப்பாடியில் விவசாய நிலங்களுக்கு மேல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 5 விவசாயிகளின் உடல்நிலை திங்கள்கிழமை இரவு பலவீனமானதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடியில் கொட்டகை அமைத்து தங்கி 8-ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உண்ணாவிரதமிருந்த விவசாயிகளை திங்கள்கிழமை இரவு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், 5 விவசாயிகளின் உடல்நிலை பலவீனமாக காணப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் 5 பேரையும் வாழப்பாடி போலீஸார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.