ஏற்காடு ஒண்டிக்கடை அருகில் 108 ஆம்புலன்ஸ் சேவை தெருமுனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தாமோதரன், சிவப்பிரகாசம், அர்ஜூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரேசன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில அமைப்பாளர் பிரேம்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் ஏற்காடு 67 மலைக் கிராம மக்கள் தொகைக்கு ஏற்ப 108 வாகனங்களும், இருசக்கர 108 வாகனமும் ஏற்காட்டில் இயக்கவேண்டும். மஞ்சக்குட்டை துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும். ஏற்காடு மலைப் பிரதேசத்தில் பச்சிளங்குழந்தை சேவைக்கான ஆம்புலன்ஸ் இயக்கப்பட வேண்டும். 108 ஒப்பந்த நிறுவனம் தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்டிஏ ஊழலின் சின்னமாக விளங்குகிறது: கேரள உயர்கல்வித் துறை அமைச்சர்

தர்மன் போஸ்டர் மேக்கிங் விடியோ!

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


