டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்: ரூ.300 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் லாரி  உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 9:34 am IST

சேலம் மாவட்டத்தில் லாரி  உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்தி,  சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும். 
பெட்ரோல்,   டீசல் விலை நிர்ணயத்தை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக நீடித்ததால்,   சேலம் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தேக்கமடைந்துள்ளன.  
இதுகுறித்து மாவட்டத் தலைவர் சென்னகேசவன் கூறியது:
சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.  வேலைநிறுத்தப் போராட்டத்தால் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.  அரிசி, பருப்பு மற்றும் பலசரக்கு பொருள்கள் இருப்பு வைத்துள்ளதால்,   விலைவாசியில் மாற்றமில்லை.  இன்னும் இரண்டு நாள்களில் மாற்றம் தெரியும். 
போராட்டம் தொடங்கிய மூன்று நாள்களில் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக,  இரும்புக் கம்பி,  ஜவ்வரிசி,  ஸ்டார்ச், தேங்காய்,  சிமென்ட் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தேக்கமடைந்துள்ளன.  எங்கள் போராட்டத்துக்கு மினி டோர் டெம்போ, வேன் உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து எங்கள் போராட்டம் தீவிரமடையும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.