மணிவிழுந்தான் பாவேந்தர் மெட்ரிக். பள்ளியில் பெற்றோர்களுக்கு பாத பூஜை நடத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் பாவேந்தர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெறவும், நலம் பெற வேண்டியும் கணபதி ஹோமம் செய்து பெற்றோர்களிடம் ஆசி பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பெற்றோர்களுக்கு மாணவ, மாணவியர் பாதபூஜை செய்து ஆசி பெற்றனர். நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.வி.பொன்னுசாமி, செயலாளர், முன்னாள் பொருளாளர் யோகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.