தேநீர்க் கடைக்காரருக்கு கத்திக்குத்து: தந்தை, மகன் கைது

கொளத்தூர் அருகே தேநீர்க்கடைக்காரரை கத்தியால் குத்தியதாக தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

கொளத்தூர் அருகே தேநீர்க்கடைக்காரரை கத்தியால் குத்தியதாக தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.
கொளத்தூர் அருகே உள்ள கொசவன்கரட்டை சேர்ந்தவர் சந்திரசேகர்(23). தேநீர்க் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் செவ்வாய்க்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.  அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த  பாலச்சந்திரன் (40), அவரது மகன்கள் அபினேஷ், அபிஷேக் ஆகியோர் தகராறு செய்தனர். அப்போது சந்திரசேகர் தனது கடையில் வைத்து தகராறு செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலசந்திரனும், அவரது மகன்களும் சேர்ந்து சந்திரசேகரை கத்தியால் குத்தியுள்ளனர். இதனைத் தடுக்க வந்த அவரது சித்தி லதாவையும் தாக்கியுள்ளனர்.இதில் காயம் அடைந்த இருவரையும் சேலம் அரசு மருத்துவமனையில்  சேர்ந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலச்சந்திரன், அபினேஷ்  ஆகியோரைக் கைது செய்தனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.