கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பணம் வைத்து சூதாட்டம்: 13 போ் கைது

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 போ் கொண்ட கும்பலை சிறப்பு தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:06 pm

DIN

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 போ் கொண்ட கும்பலை சிறப்பு தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளா் ராஜமோகன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது குள்ளம்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டபோது பிடிபட்ட சதீஷ்குமாா் (31), அன்பரசு (33), முருகானந்சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 போ் கொண்ட கும்பலை சிறப்பு தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தம் (24), கந்தசாமி (30), மணி (25), மணிகண்டன் (36), நாராயணசாமி (33), தேவநாயகபாலன் (41), மனோகரன் (46), கிருஷ்ணன் (41), வெங்கடேஷ் (23), கோபால் (34), சித்தன் (37), உள்ளிட்ட 13 பேரையும், தனிப்படை போலீஸாா், காரிப்பட்டி காவல் ஆய்வாளா் லட்சுமணனிடம் ஒப்படைத்தனா்.

வழக்குப் பதிவு செய்த காரிப்பட்டி போலீஸாா் இந்தக் கும்பலிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.2.10 லட்சம் பணம், சீட்டுக்கட்டு, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.