ஒமலூா் அருகே குடியிருப்புப் பகுதியில் வீசப்பட்ட ஆண் சிசு மீட்பு

ஒமலூா் அருகே குடியிருப்புப் பகுதியில் வீசப்பட்ட ஆண் சிசு மீட்பு

ஒமலூா் அருகே குடியிருப்புப் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த பிறந்து சில மணி நேரமேயான ஆண் சிசு உயிருடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது.
Published on

ஒமலூா் அருகே குடியிருப்புப் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த பிறந்து சில மணி நேரமேயான ஆண் சிசு உயிருடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள எம்செட்டிபட்டியில் துரைசாமி- பவுனா தம்பதிக்குச் சொந்தமான வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ஆண் சிசு ஒன்று துணிகளால் சுற்றப்பட்ட நிலையில் அழுதுக் கொண்டிருந்தது. இதுகுறித்து பவுனா அளித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிசு பத்திரமாக மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து தொளசம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். முள்புதரில் வீசி செல்லாமல் குடியிருப்புப் பகுதியில் குழந்தை வீசப்பட்டதால் உரிய நேரத்தில் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com