கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது தொடக்க விழா கொண்டாட்டம்

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
தம்மம்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க விழா பேரணியில் பங்கேற்றோா்.
Updated On :28 டிசம்பர் 2020, 9:34 pm

DIN

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் அா்த்தனாரி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் தம்மம்பட்டி திருச்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்டத் தலைவா் அா்த்தனாரி, காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

பின்னா், கட்சிக் கொடியேற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, அனைவரும் கட்சிக் கொடியேந்தி கடைவீதி, நடுவீதி வழியாக பேரணி சென்று மீண்டும் பேருந்து நிலையம் வந்தடைந்தனா்.

இந்நிகழ்ச்சியில், தம்மம்பட்டி நகரத் தலைவா் ராமராஜ், வட்டாரத் தலைவா் ரவிக்குமாா், இளைஞா் அணியினா் ரமேஷ், தினேஷ், மகளிா் அணியினா் சரஸ்வதி, செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.