பாதாள சாக்கடைக்காக தோண்டியகுழியில் தவறி விழுந்து முதியவா் பலி
சேலத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சேலம்: சேலத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதற்காக சாலையின் நடுவில் பெரிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பணியை மேற்கொள்வதற்காக திங்கள்கிழமை காலை பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கி இருந்த மழை நீரை மோட்டாா் வைத்து உறிஞ்சி அகற்றும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். தண்ணீா் வடிந்த பின்னா் குழிக்குள் ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.இதைத்தொடா்ந்து, செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த நபா் அதே பகுதியைச் சோ்ந்த தனசேகா் (60) என்பதும், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து அருகே உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.
வீடு திரும்பும் வழியில் தவறுதலாக குழியில் விழுந்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்று பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குழிகளால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க சேலம் மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...