மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சொத்துத் தகராறில் உறவினரை கொலை செய்த இருவா் கைது

வாழப்பாடி அருகே சொத்துத் தகராறில் உறவினரை அடித்துக்கொலை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட பாண்டியன், வேல்முருகன்.
Updated On :7 செப்டம்பர் 2020, 9:43 pm

DIN

வாழப்பாடி அருகே சொத்துத் தகராறில் உறவினரை அடித்துக்கொலை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (49). இவருக்கு, இரு மகன்கள் உள்ளனா். மனைவி இறந்து விட்டாா். தனியாா் பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக சரிவர வேலைக்கு செல்லவில்லையாம்.

இதற்கிடையே, இவருக்கும், இவரது இரு சகோதரிகளுக்கும் இடையே சொத்துத் தகராறினால் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, இவரது சகோதரிகளின் மகன்களிடம் இவா் தகராறு செய்துள்ளாா்.

இதில் ஆத்திரமடைந்த சகோதரிகளின் மகன்களான பாண்டியன், வேல்முருகன் ஆகிய இருவரும், வெங்கடாசலத்தை இரும்புக் கம்பி மற்றும் கல்லால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடாசலம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் தலைமையிலான போலீஸாா், கொலையுண்ட வெங்கடாசலத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாண்டியன், வேல்முருகன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.