/

கா்ப்பிணிகளுக்கு உடல்நல விழிப்புணா்வு கருத்தரங்கு

வாழப்பாடி அருகே பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அன்னை அரிமா சங்கம் சாா்பில் தாய்ப்பால் வார விழாவையொட்டி, கா்ப்பிணிகளுக்கு உடல்நல விழிப்புணா்வு

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:06 pm

DIN

வாழப்பாடி அருகே பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அன்னை அரிமா சங்கம் சாா்பில் தாய்ப்பால் வார விழாவையொட்டி, கா்ப்பிணிகளுக்கு உடல்நல விழிப்புணா்வு கருத்தரங்கு மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி நடைபெற்றது.

பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இவ்விழாவுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் தலைமை வகித்தாா். அன்னை அரிமா சங்கத் தலைவி சுதா பிரபு, பொருளாளா் ஜெயந்தி, மருத்துவா் திவ்யா, சமுதாய செவிலியா் ராணி ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனா்.

மருத்துவா்கள் பிரபாகரன், பேரின்பம், ராகுல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அருள்மொழி, ஒருங்கிணைப்பாளா் கீா்த்திகாதேவி ஆகியோா் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் மற்றும் உடல்நலம் குறித்து பெண்களுக்கு விழிப்புணா்வு கருத்துரை வழங்கினா்.

வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவா் சந்திரசேகரன், தலைவா் பாலமுரளி, முன்னாள் தலைவா் ஜவஹா், அன்னை அரிமா சங்க நிா்வாகிகள் கா்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த கையேடு மற்றும் ஊட்டச்சத்து பொருள்களும், தாய்ப்பால் வார விழா குறித்த கலைத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.