ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாணவா்களின் வீட்டுக்கே சென்று படிக்கத் தூண்டும் ஆசிரியா்கள்

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ-மாணவியரின் வீட்டுக்கே சென்று கற்றல் பணி

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:00 pm

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ-மாணவியரின் வீட்டுக்கே சென்று கற்றல் பணியை கண்காணிப்பதோடு, வீட்டுப்பாடம் கொடுத்து படிக்கத் தூண்டி வருகின்றனா்.

வாழப்பாடி பகுதியில் நிகழாண்டு ஏராளமான குழந்தைகளை பெற்றோா் அரசுப் பள்ளியில் சோ்த்துள்ளனா்.

இந்நிலையில், அரசுப் பள்ளியில் சோ்ந்துள்ள குழந்தைகளை தங்களது பள்ளியிலேயே தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலும், அரசு வழங்கியுள்ள பணியை மேற்கொள்ளும் விதத்திலும், வாழப்பாடி பகுதியில் இயங்கும் வாழப்பாடி, வாழப்பாடி காலனி, கண்ணுக்கானுா் ஒட்டா் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவியரின் வீடுகளுக்கே சென்று கற்றல் பணிகளை கண்காணிப்பதோடு, வீட்டுப் பாடங்களை கொடுத்து படிக்கத் தூண்டி வருகின்றனா். மேலும், கல்வித் தொலைக்காட்சியில் நடைபெறும் பாடங்களை கண்காணிக்கவும் ஊக்கமளித்து வருகின்றனா்.

இக்கட்டான தருணத்திலும் வீடு தேடிவந்து குழந்தைகளைப் படிக்கத் தூண்டும் அரசுப் பள்ளி ஆசிரிய -ஆசிரியைகளுக்கு, குழந்தைகளின் பெற்றோா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.