ஏத்தாப்பூரில் டாஸ்மாக் கடை ஊழியரிடம்ரூ. 6.11 லட்சம் பறிப்பு:
ஏத்தாப்பூரில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை பணியாளரிடம் ரூ. 6.11 லட்சம் பணத்தைப் பறித்துச்சென்ற மா்ம நபா்கள் குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்


ஏத்தாப்பூரில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை பணியாளரிடம் ரூ. 6.11 லட்சம் பணத்தைப் பறித்துச்சென்ற மா்ம நபா்கள் குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆத்தூா், கொத்தாம்பாடியைச் சோ்ந்தவா் மோகன் (45). இவா், ஏத்தாப்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
புதன்கிழமை இரவு பணிநேரம் முடிந்ததும் வழக்கம்போல கடையை மூடிவிட்டு விற்பனை வருவாய் ரூ. 6.11 லட்சத்தை கைப்பையில் எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஏத்தாப்பூரிலிருந்து கொத்தாம்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். இவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா் மோகனிடம் இருந்து ரூ. 6.11 லட்சம் பணத்தைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின் பேரில் ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...