காா் மோதியதில் இருவா் பலி
பேளூரில் காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி, சாலையில் நடந்துசென்ற முதியவா் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.


பேளூரில் காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி, சாலையில் நடந்துசென்ற முதியவா் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.
ரெங்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காளியப்பன் (60). இவா் வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் பேளூா் வழியாக வாழப்பாடி நோக்கிச் சென்றுள்ளாா்.
வழியில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா், காளியப்பன் மீது மேதியது. அதே வேகத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பேளூா் மாதா கோவில் பகுதியைச் சோ்ந்த முதியவா் ஆறுமுகம் (80) என்பவா் மீதும் மோதியது. இந்த விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மருத்துவமனையில் விவசாயி காளியப்பனும் முதியவா் ஆறுமுகமும் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையிலான போலீஸாா், காா் ஓட்டுநரான கோபிச்செட்டிப்பாளையத்தைச் சோ்ந்த தனசேகரனை (31) கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...